Categories
தேசிய செய்திகள்

டிக்டாக் பிரபலம் மரணம்… அமைச்சர் ராஜினாமா… உச்சகட்ட பரபரப்பு…!!!

மகாராஷ்டிராவில் டிக்டாக் பிரபலம் மரணமடைந்ததை அடுத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரபல டிக் டாக் நடிகை பூஜா சவான் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவருடன் சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரத்தோடா இருந்ததான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பூஜாவின் உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து வழங்கியுள்ளார். இதுகுறித்துப் பேசிய முதல்வர், பூஜா தற்கொலை வழக்கில் அவகாசம் கேட்டுள்ளோம். சஞ்சய் ராஜினாமா தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |