Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீ இன்னைக்கு வேலைக்கு வரணும்… அங்கன்வாடி பெண் ஊழியர் எடுத்த முடிவு… வைரலாகும் வீடியோ…!!

அங்கன்வாடியில் பணிபுரியும் பெண் ஊழியரை வேலைக்கு வரச்சொல்லி மிரட்டியதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தியா. இவர் குளத்துப்பாளையம் அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு வீடியோ பதிவினை தனது சக ஊழியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “அனைவருக்கும் வணக்கம். நான் குளத்துப்பாளையம் சந்தியா பேசுகிறேன். என்னை ரிக்கார்டு எழுதுவதற்காக ஆபீசுக்கு வரும்படி மேலதிகாரிகள் கூறினார்கள்.

ஆனால் என்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நான் ஆபிசுக்கு வரமாட்டேன் என்று கூறினேன். அதற்கு என்னுடைய மேலதிகாரிகள் என் வீட்டுக்கு சில நபர்களை அனுப்பி வைத்து என்னை அவமானப்படுத்திவிட்டார்கள். மேலும் ஆபீசுக்கு வரவில்லை என்றால் சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது எனவும் அவர்கள் என்னை மிரட்டினார்கள். என் சாவுக்கு அந்த அதிகாரிகளே காரணம் என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவை சந்தியா தனது சக ஊழியர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைத்துவிட்டு அதிக அளவிலான காய்ச்சல் மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |