கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுடன் ராகுல்காந்தி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அது மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவி ஒருவருடன் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் சிலர் “உங்களுக்கு இன்னும் வயசு ஆகல” என படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அப்பாஸ் கூறும் டயலாக்கை பதிவிட்டு வருகிறார்கள். இதனையடுத்து ராகுல் காந்தி பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதனால் அந்த இடமே உற்சாகத்தில் காட்சியளித்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
.@RahulGandhi in Tamil Nadu. pic.twitter.com/vcZ4XxKn25
— Vijai Laxmi (@Vijai_Laxmi) March 1, 2021