Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் கணவனை காணோம் சார்…! நாடகமாடிய இளம்பெண்… ஸ்கெட்ச்சு போட்டு தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல்லில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை இளம்பெண் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவி பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அன்று கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது பதிலில் காவல்துறையினருக்கு முரண்பாடு இருந்து வந்துள்ளது. இதையடுத்து தேவியின் நடவடிக்கையை காவல் துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.

அப்போது தாராபுரத்தில் வசித்துவரும் அபிஷேக் என்ற வாலிபருடன் தேவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தேவியும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் அபிஷேக் என்ற வாலிபரும் சேர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தண்டபாணியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |