Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க போனேன் ஐயா…! இப்படி பண்ணிட்டானுங்க… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூரில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் 5 பவுன் தங்க தாலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். சுதா தினமும் வயலுக்கு மாடு மேய்க்க சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய சுதாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

மேலும் அந்த இளம்பெண் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது அதை தடுக்க முயன்ற சுதாவை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதில் இரண்டு பவுன் தங்க சங்கிலி சுதாவின் கையில் பிடிபட்டது. இச்சம்பவம் குறித்து சுதா குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |