ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுவதை இன்று முதல் நிறுத்துவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுவதை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இருந்து 2000 நோட்டு களை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் வங்கி கவுண்டரில் இருந்து நோட்டுகளை திரும்ப பெற முடியும். ஏற்கனவே சில வங்கிகள் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் ஏற்றுவது நிறுத்தி உள்ள நிலையில், தற்போது இந்தியன் வங்கியும் நிறுத்தியுள்ளது.