வீட்டில் புகுந்து ரூ. 43,000 பணம், டிவி கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே ஆர்எம் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.43,000 பணம் மற்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டிவியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.