Categories
உலக செய்திகள்

ரயில் டிக்கெட்டின் விலை உயர்வு…. அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….

பிரிட்டனில் ரயில் டிக்கெட்டின் விலை அதிகரிக்கவுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பிரிட்டனில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப் போவதாக அரசு தெரிவித்திருப்பது பணியணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் விலை 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஸ்காட்லாந்தை பொருத்த மட்டில் சாதாரண நேரங்களில் 0.6 சதவீதமும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 1.6 சதவீதமும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மான்செஸ்டர் முதல் கிளாஸ்கோ ரயில் பயண டிக்கெட்டின் விலை 235 ரூபாய் அதிகரித்து 983 ரூபாயாக உள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து முழுமையான விவரம் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |