Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்குள் நுழைந்து…” 22 வயது இளைஞன் செய்த காரியம்”… அலறிய நீதிமன்றம்..!!

பட்டப்பகலிலேயே கர்நாடகாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா பகுதியில் புதிதாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் 48 வயதான வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான மனோஜ் என்ற இளைஞர் அவசரஅவசரமாக வாகனத்தில் இருந்து இறங்கி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்ப முயற்சி செய்துள்ளார். இதையடுத்து சுதாகரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் வழக்கறிஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து மனோஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வழக்கறிஞரின் உறவினர் தான் இந்த மனோஜ் என்பது தெரியவந்தது.  இதையடுத்து இது சொத்து தகராறு காரணமாக கொலை செய்தாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டப்பகலிலேயே நீதிமன்றத்திற்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வழக்கறிஞரை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வழக்கறிஞர்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

Categories

Tech |