Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்தவர் செய்த செயல்…பெற்றோரிடம் கதறிய சிறுமி…போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாம் நீண்ட காலமாக செயல்பட்டு  வருகின்றன . அங்கு 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.அந்த முகாமில் தன்ராஜ் என்ற இளைஞன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற இளம்பெண்னை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.  இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் .

இதனிடையே இவர்களிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் அதே முகாமில் கணவன் மனைவி இருவரும்  தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் தன்ராஜ் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிப்புக்குள்ளான சிறுமி மனவேதனை அடைந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள்  கும்மிடிப்பூண்டியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தன்ராஜ் மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகாமிற்கு சென்று விசாரனை மேற்கொண்டு குற்றசாட்டை உறுதிப்படுத்தியதோடு தன்ராஜ்யை  போக்சா சட்டத்தின்  கீழ்  கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர் .

Categories

Tech |