திமுக கூட்டணியில் கட்சிகள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அணி தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.