Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை…!! இனிமேல் இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க… 5 வருஷம் கம்பி எண்ண வச்சிருவாங்க…!!

பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்களுக்கு  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்று வரும் பொழுது பிரச்சனைக்கு காரணமானவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது கழுத்தை பிடித்து நெரிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  அதனால் பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்கள் மீது “தாக்குதல்” என்ற பிரிவில் மட்டுமே  வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவருக்கு ஆறு மாதங்கள் வரை மட்டுமே சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளும், பிரச்சாரகர்களும் முயற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில் முன்னாள் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆணையர் லேடி நியூ லவ் மற்றும் பிரச்சாரகர்கள் ஒன்று  சேர்ந்து  இந்த சட்டத்தில் கண்டிப்பாக திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மனு அளித்திருந்தனர். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு சட்டம் வரப்போகிறது. அது என்னவென்றால் , உள்நாட்டு துஷ்பிரயோக (உடல் ரீதியாக சித்ரவதை) மசோதாவில் இந்த திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

இதில் தெரிந்தே ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெரித்தல் அல்லது அவர் சுவாசிப்பதற்கு தடையாக வேறு ஏதாவது ஒரு செயலை செய்தல் போன்ற குற்றங்கள் அடங்கும் . இந்த மசோதாவின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் House of Lord-ல் இந்த சட்டம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |