நம் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் கலன் ஒன்றை வானில் நேரில் பார்த்ததாக கூறி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். இதைப்பற்றி அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதி படுத்தியது. மேலும் ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்ற நீண்ட நெடிய சந்தேகம் ஒரு விவாதமாகவே பல தசாப்தங்கள் கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏலியன்களை பார்ப்பதாகவும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாகவும் வேற்றுகிரகவாசிகளின் கலன்களை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்புவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சிலர் அடையாளம் தெரியாத UFO என்னும் பறக்கும் பொருளை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த வாரம் சின்சினாட்டி நகரில் இருந்து பீனிக்ஸ்க்கு சென்றுகொண்டிருந்தபோது நியூமெக்ஸிகோ வான்பரப்பில் 35000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானத்தை திடீரென வேகமாக ஒரு மர்ம பொருள் அதிவேகமாக கடந்ததை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானார். அப்போது உடனடியாக விமான கட்டுப்பாட்டு பிரிவை தொடர்பு கொண்டு மேல் ஏதேனும் தாக்குதல் இலக்கு இருக்கிறதா என்று வினாவினார்.
அப்போது ஸ்டிவ் டக்லஸ் என்ற ஏர்லைன் ரேடியோ ஆர்வலர் மர்ம பொருளை பார்த்த விமானியின் 15 நொடி வாய்ஸ் ரெக்கார்டிங் தனது பிளாக்கில் பதிவேற்றிவைத்திருந்தார். விமானத்திற்கும் மேல் உருளை வடிவ பொருள் அதிவேகமாக கடந்ததை பற்றி கூறினார். அது எதுவும் ஏவுகணை என தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI ஸ்டிவ் டக்ளஸின் ஆடியோ பதிவை உறுதிப்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக சந்தேகத்திற்கிடமான அல்லது குற்ற செயல்களை அறிந்தால் உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்பு அல்லது FBI ஐ தொடர்பு கொள்ளலாம் என்று FBI செய்தி தொகுப்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில் 21ஆம் நூற்றாண்டிலாவது வேற்று கிரகவாசிகள் பூமியில் இருக்கின்றதா என்ற விவாதத்திற்கு விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது