நடப்பு உலக கோப்பை தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சன் 578 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்
உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் நடப்பு தொடரில் கேன் வில்லியம்சன் 578 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு தொடரில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் வில்லியம்சன். அந்த சாதனை என்னவென்றால் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் நிகழ்த்தியுள்ளார். நடப்பு தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 578 ரன்கள் அடித்ததன் மூலம் ஜெயவர்த்தனே சாதனையை முறியடித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியல் :
1. கேன் வில்லியம்சன் – 578 (2019)
2. ஜெயவர்த்தனே – 548 (2007)
3. ரிக்கி பாண்டிங் – 539 (2007)
4. ஆரோன் பிஞ்ச் – 507 (2019)
5. டிவில்லியர்ஸ் – 482 (2015)