மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் வாரம் தோறும் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதனை அறியாத பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தங்கள் கோரிக்கை மனுவுடன் வந்துள்ளனர். இதனால் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வண்ணம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியில் அதிகாரிகளின் அறிவுரையின் படி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டு விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளர்.