கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் தங்கள் குழந்தைகளுக்காக அதனை பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சிலர் கழுதைகளை கொண்டு வந்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கழுதை பாலை வாங்கி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கொடுப்பர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இந்த கழுதை பாலில் நிறைந்து இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இதனை ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளனர்.
இந்த பால் ஒரு சங்குக்கு 50 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விலையை பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக கழுதைப்பாலை வாங்கி சென்றதால் விற்பனை ஜோராக நடைபெற்றுள்ளது.