மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் ஆங் சான் சூச்சி வெளியில் தென்படாத நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் கடந்த மாதத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அன்றிலிருந்து ஆங் சான் சூச்சி பொதுவெளியில் காணப்படவில்லை. இந்நிலையில் அவரின் வழக்கறிஞர் Min Min Soe என்பவர் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆட்சி கை மாறிய பின்பு ஒரு மாதத்திற்கு முன் ஆங் சான் சூச்சி மீது புது வழக்கு ஒன்று பதியப்பட்டது.
அதாவது மியான்மரில் அச்சப்படும் வகையில் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலோ தகவல்களை பரப்புவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவ்வாறான தகவல்களை ஆங் சான் சூச்சி வெளியிட்டிருப்பதாக புது வழக்கு ஒன்று அவர்மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது காணொலிக் காட்சி வாயிலாக ஆங் சான் சூச்சி நீதிமன்ற விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கறிஞர் Min Min Soe இது பற்றி கூறியுள்ளதாவது, கடந்த திங்கட்கிழமை அன்று நீதிமன்ற விசாரணையில் நடத்தப்பட்ட காணொளி காட்சியில் ஆங் சான் சூச்சி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் தோன்றியுள்ளார்.
மேலும் விசாரணையில் தன் சட்ட குழுவை சந்திப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் Min Min Soe இந்த வழக்கிற்கான அடுத்த விசாரணையானது வரும் மார்ச் 15ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.