சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள டாக்டர் பட பாடல் இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடெக்சன்யும் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.
தற்போது, அந்தப் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமாகி அனைவராலும் கொண்டாடப்பட்டது. சிறுபிள்ளைகள் இருந்து பெரியவர்கள் வரை அப்பாடலை ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அந்த பாடல் யூட்யூபில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து வருகின்றனர். இதனை கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் “அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி” என பதிவிட்டுள்ளார்.
Another century from our Rockstar @anirudhofficial 😎🥳 #100MForChellamma ♥️ – https://t.co/AX2NM3ITWr #DOCTORfromMarch26 #Doctor @Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @jonitamusic @SKProdOffl @KalaiArasu_ @kjr_studios @SonyMusicSouth pic.twitter.com/wwPpkJmHT8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 1, 2021