மயிலாடுதுறையில் நீண்ட நேரம் போனில் பேசியதால் இளம்பெண்ணை வாலிபர் செல்போன் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையழகி என்ற மகள் இருந்துள்ளார். இவர் செல்போனில் யாரிடமோ அடிக்கடி பேசி வந்துள்ளார். அதனை அப்பகுதியில் வசித்து வரும் கலையழகியின் உறவினர் ரகு என்னும் வாலிபர் கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கலையழகி செல்போனில் யாரிடமோ அதிக நேரமாக பேசிக்கொண்டே இருந்துள்ளார்.
அதனைக் கண்ட ரகு அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். அதை கலையரசி கேட்க மறுத்ததால் இருவருக்கும் இடையே பயங்கரமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் வாக்குவாதம் தகராறாக முற்றியத்தில் ரகு அருகிலிருந்த செல்போன் ஜார்ஜரால் கலையழகியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரகு நான் தான் கலையழகியை கொலை செய்தேன் என்று காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து திருவெண்காடு காவல்துறையினர் ரகு மீது வழக்கு பதிவு செய்து பின் கைது செய்தனர்.