அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறை தனியாக பிரிந்துள்ளது சூழலியல் ஆய்வாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு பெரிய கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். அங்கு குறைந்த அளவு வெப்பம் வந்து சேர்வதால் எப்போதும் பணி கட்டினால் மூடப்பட்டிருக்கும். ஆண்டில் 6 மாதங்கள் ஆயிற்று வெளிச்சமே இருக்காது. புவி வெப்பமயமாதல் காரணமாக அங்கு உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகி வருகின்றன. அதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள பெரிய பனிப்பாறை “brunt ice shelf”உடைந்து தனியாகப் பிரிந்தது. சுமார் 1.250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பனிப்பாறை.அண்டார்டிகாவில் உள்ள பிரிட்டன் ஆய்வகத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பிளவுபட்டுள்ளது. இவ்வாறு பனிப்பாறைகள் உடைவது இயல்புதான் என்றாலும் அந்த பனிப்பாறையின் அளவு மிகப் பெரியதாக இருப்பது சூழலியல் ஆய்வாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.