நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது.
தொடர்ந்து பேசிய அவர் , மாணவர்களால் அதை படிக்க முடியாது. புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன” என்று தெரிவித்தார். சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா கூறுகையில் , புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.