Categories
தேசிய செய்திகள்

நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி  மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் சேர்க்கைக்கு போதுமானதாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for நீட் தேவையில்லை

 

தேவைப்பட்டால், நெக்ஸ்ட் எனப்படும் தேர்வை நடத்தி முதுநிலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்கு இந்த தேர்வு முடிவுகளே போதுமானது என்று கூறப்படுகிறது. மேலும் திருத்தப்பட்ட தேசிய  மருத்துவ ஆணை மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |