Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தலைவரா…. என்ன சொல்லணுமோ சொல்லிட்டோம்…. பாஜக தலைவர் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,  இன்றைக்கு தமிழக அரசியலில் பாரத ஜனதா கட்சியின் பங்கானது மிகமுக்கியமான பங்காக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி தேர்தல் பரப்பை விழுப்புரத்தில் மேற்கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ஜி கோயமுத்தூரில் தேர்தல் பரப்பை மேற்கொண்டார். தேசியத் தலைவர் நட்டா மதுரையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தொடர்ந்து எங்களுடைய தேர்தல்  பணியானது  மாநிலம் முழுவதும் நடைபெறும். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்போம் என எங்களின் தேசிய தலைவர் மதுரையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து எங்களுடைய முன்னாள் தலைவர் அமீஷா ஜி அவர்களும் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சந்தித்து பேசிக் கொண்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது இலக்காக இருக்கிறது. அதற்காக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள்  எங்களுடைய பணிகளை துவக்கி இருகிறோம். எங்களுடைய தேர்தல் பொறுப்பாளரும், உள்துறை இணை அமைச்சருமான மரியாதைக்குரிய திரு கிருஷ்ணன் ரெட்டி ஜி கோயமுத்தூரில் வெற்றிக் ‘கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதைப்போல் ,சென்னையில் நடக்க இருக்கின்ற நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். எங்களுடைய மரியாதைக்குரிய தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி அவர்கள் கிருஷ்ணகிரியில் கலந்துகொள்ள இருக்கிறார். இணை தேர்தல் பொறுப்பாளர் ஜென்ரல் விகே சிங் அவர்கள் மதுரையில் நடக்கின்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். இப்படி எங்களுடைய தேர்தல் பணியில் எங்களுடைய தேசிய தலைவர்களும் இங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். தொகுதி ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் இரண்டு நாட்களில் அல்லது நாளைக்குள் முழுமையான விவரங்கள் தரப்படும். நாங்கள் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் இரட்டை இலக்கில் இருப்பார்கள். தமிழக தலைவராக  எங்களுடைய தேசிய தலைமைக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லிருக்கின்றேன் என எல் முருகன் தெரிவித்தார்.

Categories

Tech |