நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இவரது இக்கருத்துக்கு பலரும் ஆதரவும்,எதிர்ப்பும் அளித்து வருகின்றனர்.குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கிராமப்புற ரசிகர்களுக்காக டிக்கெட் விலையை குறைப்பீர்களா ? என்றும் தங்கள் படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்காக அவசரமாக கருத்து கூறுகிறீர்களா ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.