தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் தங்களுடைய பணிகளை செய்து வருகிறது. மேலும் ஓட்டுக்காக மக்களுக்கு பணத்தைக் கொடுப்பது தவிர்ப்பதற்காகவும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதித்தவர்கள் தபால் மூலமாக வாக்களிக்கலாம். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கின்றவர்கள் மார்ச் 12 முதல் 16 வரை விண்ணப்பிக்கலாம். தேர்தலன்று பணியில் இருக்கும் ஊடகத்துறையினரும் தபால் வாக்களிக்கலாம். ரயில்வே, ரயில்வே காவலர்கள் உள்ளிட்ட துறையில் உள்ளவர்களும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.