தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணம் இன்றி பணத்தை எடுத்துச் செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்கின்றனர். எனவே மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளான திருமண செலவுகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும்ரூ. 50,000க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லும் போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்துக்கொள்ளவேண்டும்.
திருமண செலவுக்காக பணத்தை செல்லும் போது அதற்கான திருமண பத்திரிக்கையை கையில் வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் கையில் மருத்துவ சீட்டு ஒன்றையும் வைத்திருந்தால் நல்லது. அப்படி வைத்திருக்கும் பட்சத்தில் நம்மிடம் இருந்து பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்ய மாட்டார்கள். எனவே வணிகர்கள் உள்ளிட்டவர்கள் பணத்தை எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்களை வைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல தேர்தல் பிரச்சாரம் இரவு 10 மணிக்கு மேல் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேலும் யாராவது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் மக்கள் CI VIGIL என்ற மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது ECI.GOV.IN என்ற இணையதள முகவரி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.