திமிங்கலம் எடுத்த வாந்தியால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர் நியார்மிரின்(49). இந்நிலையில் சம்பவத்தன்று கனமழை பெய்துள்ளதுள்ளது . பின்னர் மழை நின்றதையடுத்து அவர் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கடற்கரையில் ஏதோ மிதந்து கொண்டிருப்பது போல தெரிந்ததுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த அவர் பந்து போன்ற இருந்த அதை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டியுள்ளார். அவர்கள் அதை திமிங்கலம் எடுத்த வாந்தி அதாவது Ambergris என்று கூறியுள்ளனர். மேலும் இதனுடைய மதிப்பு சுமார் 2 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது திமிங்கலம் மீன்களை விழுங்கும் போது அதில் சில மீன்கள் செமிக்காமல் வயிற்றில் அப்படியே தங்கிவிடும். சில காலங்கள் கழித்து திமிங்கலம் அதை வாந்தியாக வெளியே எடுக்கும்போது மிகப்பெரிய அளவில் பந்துபோல வெளியே வந்து விழும். இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படுகிறது. மேலும் இது அதிக விலை மதிப்புடையது ஆகும். இதை சூடுபடுத்தும் போது உருகி மீண்டும் கடினமாகி ஒரு வாசனை வரும். இதையடுத்து நியார்மிரின் வீட்டில் சென்று அதிகாரிகள் சோதனை செய்த உள்ளதாகவும், இது தனக்கு பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.