தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு பற்றி அதிமுக மற்றும் பாஜக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அதிமுக மற்றும் பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள் வரை ஒதுக்குகிறோம் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூறினர். ஆனால் பாஜக மேலும் சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அமமுக கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜக வலியுறுத்தியதாகவும் அதிமுகவினர் பிடிவாதமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் அமித்ஷா, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஐ எச்சரித்து சென்றதாகவும், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.