உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் இளவரசர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் இளவரசரான 99 வயதுடைய பிலிப் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் பிலிப் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு தொற்றுநோய்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு இருக்கும் இதய பிரச்சனைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார இறுதிவரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.