ஆஸ்திரேலியாவில் மகளின் அறையை சுத்தம் செய்யச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளுடைய அறையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது ஷூ லேஸ் போல ஏதோ இருந்துள்ளது. அதன்பின் அறையின் லைட்டைப் போட்டு அந்தப் பொருளை பார்த்துள்ளார். அப்போது தான் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது தான் இருட்டில் கண்டது ஷு லேஸ் அல்ல என்று. ஆம், அது ஒரு மீட்டர் நீளமுடைய விஷப்பாம்பு ஆகும்.
அந்தத் தாயின் மகளும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டு இது மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பின்பு அம்மாவும், மகளும் சேர்ந்து அந்தப் பாம்பை சிறிது நேரம் வீடியோ எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து அதனை வெளியே துரத்தி விட்டுள்ளனர். தாயும், மகளும் எடுத்த வீடியோவை அவர்கள் இணையத்தில் பதிவிட்டனர்.
இதனைக் கண்ட பாம்பு நிபுணர்கள், “அந்தப் பாம்பு தன் உடலை “எஸ்” போல வளைத்து உள்ளது. இது அந்தப் பாம்பு தாக்கத் தயாராக இருப்பதை குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இதேபோல் பல வகை பாம்புகள் வந்து போவது சாதாரணமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.