Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தபால் மூலம் வாக்களிக்க…. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்-16…. வெளியான அறிவிப்பு…!!

தபால் மூலம் வாக்களிப்பதற்கு வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னையில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று வாக்களிக்க முடியவில்லை என்றால் தபால் மூலம் வீட்டிலிருந்தே தங்களது வாக்குகளை அளிக்கலாம். அவ்வாறு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் 12டி என்ற விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வரும் 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் இடம் கொடுக்க வேண்டும்.

இதில் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழையும் கண்டிப்பாக அந்த விண்ணப்பத்தோடு இணைந்திருக்க வேண்டும். இந்த விண்ணப்பப்படிவங்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னரே தபால் மூலம் தங்கள் வாக்குகள் செலுத்த முடியும் என்ற தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |