மன உளைச்சளால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி நல்லம்மாள். இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டு செலவுக்கு பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுண் காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லமாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.