Categories
மாநில செய்திகள்

விருப்ப மனு அளித்தவர்களிடம்… அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் நேர்காணல்…!!

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேர்காணல் நடத்திவருகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்திலுள்ள கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சியிலும் சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்காக பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தி வருகிறார்.

இன்று காலை கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம் தொகுதிகளுக்கும், மாலை விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தொகுதிகளுக்கும் நேர்க்காணல் நடைபெறுகிறது.

Categories

Tech |