Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என்னை யாரும் சரியா கவனிக்கல” விரக்தியில் முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் இசக்கிமுத்து என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இசக்கிமுத்துவை அவரது இரண்டாவது மகன் முருகன் பராமரித்து வந்த நிலையில், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளர். இதனால் அவரது மூத்த மகன் கண்ணன் என்பவர் இசக்கி முத்துவை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து ஏற்கனவே கண்பார்வை சரியில்லாத இசக்கிமுத்து தன்னை யாரும் கவனித்துக் கொள்ளவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவருடைய மகன் கண்ணன் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |