இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அவரது தாய் பேய் ஓட்டும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பேய் ஓட்டும் பெண் சிறுமியின் உடலின் மீது எண்ணெய் ஊற்றி ஒரு பிரம்பால் அடித்துள்ளார். அந்தச் சிறுமி வலி தாங்காமல் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தாய் சிறுமியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் சிறுமி உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அந்தப் பேய் ஓட்டும் பெண்ணையும், சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து இந்தப் பேய் ஓட்டும் பெண்ணால் வேறு யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.