மேற்கு இந்தியா ஹார்பர் தீவு கடற்கரையில் கண்டறியப்பட்ட 41 கிலோ கொண்ட உலோக பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது
பிரிட்டனில் மனான்கிளார் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய குடும்பத்துடன் மேற்கிந்திய ஹார்பர் தீவுக்கு சென்றுள்ளார். தீவில் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான ஒரு பொருள் கடற்கரையில் இருப்பதை மனான் பார்த்துள்ளார். அந்தப் பொருள் பாதி கடற்கரை மணலில் புதைந்து பளபளவென்று மின்னியது. அதன் அருகே சென்று அதை வெளியே எடுக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
ஆனாலும் அதனை வெளியே எடுக்க முடியவில்லை. அதனால் அதனைச் சுற்றியுள்ள மணலை அகற்றி பார்த்ததில் அது மிகப் பெரிய உலோக பந்து என்று தெரியவந்துள்ளது. அதில் ரஷ்ய மொழியில் எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளது. உடனடியாக அவர் தனது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார் .இதனை மர்ம உலோகப் பந்து என்றும் பதிவு செய்துள்ளார். அதனால் இச்செய்தி காட்டுத்தீ போல் பரவி அப்பொருளை காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.
இதனைக் குறித்து மனான் கூறியது,” நாங்கள் கடற்கரை மணலில் உலாவிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் பொருளை பார்த்தோம் .அதில் ரஷ்ய எழுத்துக்கள் இருந்ததையும் பார்த்தோம். அது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை என்றார். உலக பந்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது ராக்கெட்டில் பயன்படுத்தும் உலோகஉருளையாக இருக்கலாம் அல்லது ஒரு செயற்கைக் கோளில் உள்ள பொருளாக இருக்கலாம்” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். கடற்கரையில் மணலில் எடுக்கப்பட்ட உலோக உருளையின் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.