Categories
மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!

தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி   ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கணினிகள் மடிக்கணினிகள் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Image result for arrest

அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் ,தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் நள்ளிரவு முழுவதும் நடத்திய  விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின் இருவரையும் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் கொண்டுவரப்பட்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்பும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேலும் 14 பேரை டெல்லியில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |