Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் தப்பிக்க முடியாது…. பறக்கும் படையினர் சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களோ அல்லது பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து 3 பறக்கும் படை குழுக்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளன. எனவே இந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 283 வாக்கு சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |