கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மகளான வாசுகி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு சென்ற வாசுகி மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வாசுகி கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.