கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சீனா தடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீனாவிலுள்ள ஒரு பத்திரிக்கை குழு அங்கு நடக்கும் சட்ட விரோத செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மறைக்க சீன அரசு கொரானா வைரஸை காரணம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இப்பத்திரிகை குழு சீனாவின் கூடுதல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு கொரோனா தொற்றை சாதகமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் சீனாவில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸை ஊடகவியலாளர்களை தடுக்கும் வழியாக சீன பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள வுஹான் பகுதியில் உருவான கொரோனா தொற்று தற்போது அங்கு எந்த நபருக்கும் இல்லைஇருப்பினும் உலக நாடுகள் பல வற்றில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பொது சுகாதார பேரழிவின் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்ற அதிகாரப்பூர்வ விவரணையை ஊக்குவிப்பதாக பத்திரிக்கை குழு கூறியுள்ளது.
மேலும் இந்த பேரழிவின் குற்றச்சாட்டிலிருந்து மீண்டு வர சீனா வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மூலம் கொரோனா தொற்று பற்றிய செய்திகள் பரவுவதை தடுக்க முயற்சி செய்து வருகிறது. பலமுறை வெளியேறி விடுங்கள் அல்லது தனிமைப்படுத்தி விடுவோம் என நிருபர்களை சீனா அச்சுறுத்தி வருகிறது . இதனால் பலரும் தங்களின் கடமையை செய்யாமல் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
மேலும் வெளிநாட்டு நிருபர்கள் கிளப் பத்திரிக்கையாளர்களின் செய்திகளையும் தடயங்களையும் கண்காணிக்க அதிகாரிகள் கொரோனா சோதனைச் சாவடிகள் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் முக்கியமாக அமெரிக்காவுடனான உறவுகள் முறிக்கப்பட்ட நிலையில் அதிகமான பத்திரிக்கையாளர்களை வெளியேற்றியுள்ளதாகவுமாவர்கள் குறம்சாட்டியுள்ளனர்