ஆந்திராவின் எதிர்க் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநில எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு திருப்பதியில் நடைபெறும் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பதி விமான நிலையம் வந்துள்ளார். அங்கு சில காவல் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக சந்திரபாபு நாயுடுவை திருப்பதி செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சந்திரபாபு நாயுடுவுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அதிகமாகாமல் இருக்க காவல்துறை அதிகாரி ஒருவர் சந்திரபாபு நாயுடுவின் முன்பு கையெடுத்து கும்பிட்டு அவரை சமாதானப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.