Categories
தேசிய செய்திகள்

9 மணி நேரம் தூங்கினால் போதும்…. ரூ.1 லட்சம் சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

பிரபல மெத்தை நிறுவனம் 9 மணி நேரம் நன்றாக தூங்கி எழுபவர்களுக்கு ரூ.1லட்சம் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள Wakefit.co என்ற நிறுவனம் “ஸ்லீப் இண்டர்ஷிப்” என்ற போட்டியை  அறிவித்து உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு எனவும் அறிவித்துள்ளது. தூங்குவது தான் எளிதான ஒன்று என்று நாம் நினைத்தாலும், இதில் இன்டர்ன்ஷிப் பெறுவது எளிதல்ல. தூங்குவதே தங்களின் முன்னுரிமை என்பதையும், எப்போதும் தூங்குவதையே விரும்புகிறோம் என்பதை போட்டியாளர்கள் உண்மையிலேயே நிரூபிக்க வேண்டும்.

கடந்தாண்டு இந்த போட்டி வெற்றிகரமான முயற்சியாக இருந்தது. கடந்த ஆண்டு நடந்த இதே போட்டியில் 1.70 லட்சம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 100 நாட்களுக்கு தினமும் 9 மணி நேரம் தூங்கி எழுபவர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது. இதனால் பலரும் இதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Categories

Tech |