நார்த்தங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
வேக வைத்த சாதம் – 2 கப்
நார்த்தங்காய் – 2
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
உளுந்தம்பருப்பு – சிறிதளவு
வேர்க்கடலை – தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு – 4 (துருவியது)
இஞ்சி துண்டு – 2 (துருவியது)
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டிஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
செய்முறை:
ஒரு நார்த்தங்காய மட்டும் எடுத்து சின்ன பாத்திரத்தில புழிஞ்சி சாறை மட்டும் எடுத்துக்கணும். பின்னர் அடுப்பில கடாயை வச்சி அதில கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிச்சதும், சீரகம், உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலைய போட்டு ஓரளவுக்கு நல்லா சிவக்க வதக்கிக்கணும்.
மேலும் வதக்கிய வேர்க்கடலையுடன், கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய பொடியா நறுக்கி போட்டு லேசாக வதக்கிட்டதும், மஞ்சள் தூள், உப்பையும் போட்டு நல்லா வதக்கிக்கணும்.
பிறகு வதக்கிய கலவையுடன், கொத்தமல்லி இலையை பொடியா நறுக்கி போட்டு நல்லா வதக்கினபிறகு, புழிஞ்சி வச்ச நார்த்தங்காய் சாறை ஊற்றியதும், வேக வச்ச சாதத்தை போட்டு நல்லா கிளறிவிட்டு இறக்கி பரிமாறினால் ருசியான நார்த்தங்காய் சாதம் ரெடி.