இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி விழா அத்துடன் சுவாமிக்கு ஆடித் திருக்கல்யாண விழா ஆகியவை இத்திருக்கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாளான பிப்ரவரி 4ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலையில் 9.30 மணி முதல் 10.30 மணிக்கு மகாசிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. இதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்படும்.
இதன்பின் திருவிழாவின் 8-வது நாளான வரும் புதன்கிழமை 10 தேதி மகா சிவராத்திரி நாளன்று வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். இந்த திருவிழாவிற்காக கோவில் பணிகளை இணை ஆணையரான தனபால் தலைமையில் பொறுப்பேற்று பணிகள் நடைபெறும். இவருடன் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் சூப்பிரண்டுகளான ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன்,கமலநாதன், செல்லம் ஆகியோர் தலைமையில் கோவில் திருப்பணிகள் நடைபெறுகின்றது.