Categories
உலக செய்திகள்

எத்தனை பேர வேணாலும் கொல்லுங்க… எங்க போராட்டம் தொடரும்… மியான்மரில் மக்கள் ஆவேசம்…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் சில நாட்களாகவே ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது என்று இதனை கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங் சாங் சூகியும் அரசியல் தலைவர்களையும் விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாகூன்,டாவே, மாண்டலே, மியேக் போன்ற நகரங்களில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்கள்.

அதில் 18 பேர் உயிரிழந்தனர் . போராட்டக்காரர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பல பேர் இல்லாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்பட்டு உள்ளது . மேலும் ராணுவத்தின் இந்த கொடூர செயலால் மக்கள் அஞ்சாமல் நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதேபோல் யங்கூன் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ராணுவத்திற்கு எதிரான முழக்கங்களை  எழுப்பி உள்ளார்கள். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

மேலும் மாண்டலே ,டேவி போன்ற நகரங்களில் நடைபெற்ற பேரணியில் புத்த குருமார்களும் மற்றும் ஏராளமானோர் ராணுவ ஆட்சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கொண்டு சென்றனர். இப்போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டு மற்றும் கையெறி குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ராணுவத்தினர் திரும்பிச் சென்ற பிறகும் மக்கள் சாலைகளில் குவிந்து வருவதால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமே திணறி வருகிறது.

இதற்கிடையே ஆங் சாங் சூகி மற்றும் அதிபர் வின் மின்ட் ஆகியோர் அடங்கிய வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும்ஆங்சாங்சூகி மற்றும் அதிபரின் மீதும் தேசதுரோகம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

Categories

Tech |