Categories
உலக செய்திகள்

“இனி இந்த முறையில கொரோனா பரிசோதனை செய்யாதீங்க”… சீனாவுக்கு கோரிக்கை விடுத்த ஜப்பான்….!!

கொரோனா பரிசோதனையை ஆசனவாய் வழியாக செய்வதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா ? என்ற பரிசோதனை செய்ய பல முறைகள் இருப்பினும் கொரானா பரிசோதனையை ஆசனவாய் வழியாக ஏன் செய்ய வேண்டும், அப்படி செய்யும் பொழுது அது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு  உளவியல் வலியை ஏற்படுத்துகிறது என்று ஜப்பான் செய்தி தொடர்பாளர் Katsunobu Kato கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சீனாவில் வசிக்கும் சில ஜப்பானியர்கள் எங்களிடம் வந்து  தாங்கள் ஆசனவாய்  கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது என்றும் கூறினர். இதுவரை எத்தனை பேர் இந்த ஆசனவாய்  பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை” என்று கூறினார். இந்த முறையில் சோதனை மேற்கொள்வது மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று ஜப்பான் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

“இதுகுறித்து ஜப்பான் வேண்டுகோள் விடுத்தும் சீனா சோதனை முறையை மாற்றுவதாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. எனினும் ஜப்பான் தொடர்ந்து சீனாவிடம்  ஆசனவாய் கொரோனா பரிசோதனை முறையை மாற்றும் வரை கோரிக்கை விடுத்துக் கொண்டே தான் இருக்கும்” என்று Katsunobu Kato தெரிவித்துள்ளார்.

Categories

Tech |