கோவை மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணுக்கு கடந்த ஒரு வருடகாலமாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .
சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் அமைந்துள்ள வெள்ளமாவடி பகுதியை சேர்ந்து 30 வயதுடைய நபர் கனகராஜ். இவர் கோவை மாவட்டத்தில் கோவை புதூர் பகுதியில் சில வருடங்களாக கூலித் தொழில் செய்து வருகிறார் .அதற்காக அவர் இப்பகுதியில் விடுதி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் சென்ற ஒரு வருடமாக கோவை புதூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணை பேருந்து நிறுத்தத்தில் அப்பெண்ணை பார்த்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் எங்கே சென்றாலும் இவர் பின்தொடர்ந்து சென்று ,அந்த பெண்ணிற்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். சம்பவ தினத்தன்று இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த கனகராஜ் , அவர் அங்கு சென்றபோது விசில் அடித்தும் , சைகை மூலமாகவும் அப்பெண்ணிற்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் மிகவும் மனவேதனை அடைந்த இளம்பெண் இந்த சம்பவத்தைப் பற்றி வீட்டில் உள்ள தனது பெற்றோர்களிடம் இதைப் பற்றிக் கூறி அழுதார். இதனால் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியான கனகராஜை கைது செய்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.