தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கெட்டிசெவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது அதில் 131 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் காரை ஓட்டி வந்த டிரைவரை அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த சசிவர்ணம் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் சசிவர்ணத்தை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களையம் பறிமுதல் செய்த அதிகாரிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.