Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

4 வருஷமா தீராத வயிற்றுவலி…. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. காப்பாற்றிய மருத்துவர்கள் …!!

திருச்சியில் வசிக்கும் 40 வயது பெண் ஒருவருக்கு நான்கு வருடங்களாக வயிற்றில் தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி பிரைட்லைன் என்ற மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது அவருடைய வயிற்றில் பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டி இருந்ததன் காரணமாக அவருக்கு சிறுநீரகம், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அவற்றின் செயல்பாடுகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்துள்ளது.

இந்தக் கட்டியானது 18 கிலோ எடையுடன் இருந்துள்ளது. எனவே மருத்துவர்கள் நாலு மணி நேரத்திற்கும் மேலான அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணிண் வயிற்றிலிருந்து கட்டியை நீக்கியுள்ளனர். தற்போது அந்த பெண்மணி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் அனுமதியோடு அவருடைய கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |