Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பலனளிக்காத சிகிச்சை…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலப்பள்ளி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குரிசிலாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தமிழரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற அசோக், அவரது மச்சான் பிரவீன் என்பவருடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அசோக் குளித்து கொண்டிருக்கும் போது, திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அசோக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |